-அகமட் எஸ். மு கைடீன்-
கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சாய்ந்தமருது பீச்பார்க் அபிவிருத்தி வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியுமென கல்முனை நீதவான் நீதி மன்றம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தரின் முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை பொலிசாரினால் பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு எதிர்வரும் 29.08.2013 திங்கட்கிழமை விசாரனணக்கு எடுக்கப்படவிருந்தது.
இந்நிலையில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நகர்வு மனு அனைத்து திறந்த மன்றில் இவ்வழக்கு இன்று (31.07.2013) அழைக்கப்ட்டு தமது பக்க சட்டத்தரணி மூலம் நீதி மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்து மாவட்ட நீதி மன்றத்தின் தீர்ப்பினை சமர்ப்பித்து விண்ணப்பம் செய்தபோது மேற்கண்ட தீர்ப்பு நீதவான் நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.
குறித்த பீச் பார்க் கட்டுமானத்திற்கு பொலிசார் எந்தவித தடைகளையும் விதிக்கக் கூடாது எனவும் பொலிசார் தடைகளை விதிக்கும் பட்சத்தில் நீதி மன்றத்திற்கு தெரியப்படுத்தமாறும் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் இதன்போது தெரிவிக்கப்ட்டது.
சாய்ந்தமருது ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்ஹரீஸ் தலைமையில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களின் முன்னிலையில் நடபெற்ற பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு அதிகாரி ஏற்படுத்தும் தடைகளை முடிவிற்கு கொண்டுவரும் கலந்துரையாடலில் உடன்பாடுகள் எட்டப்பட்டு நிர்மானவேலைகள் ஆரம்பிக்கப்ட்டிருந்தது.

பின்னர் மீண்டும் கரையோர பாதுகாப்பு அதிகாரி பொலிசாருக்கு விடுத்த முறைப்பாட்டினால் நிர்மானப் பணியினை மேற்கொண்டிருந்த மேசன்மார் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் நிர்மானப் பணிகளுக்கு மீண்டும் தடைவிதிக்கப்பட்து.
இவ்வாறு சாய்தமருது பீச் பார்க் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் பீச் பார்க் கட்டுமானம் தொடர்பில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வேலைத்திட்டத்திற்காக நெல்சிப் திட்டத்தின் மூலம் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவம்பர் மாதத்திற்கு முன்னதாக சகல வேலைகளும் பூர்த்தியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காலக்கேட்டிற்கு முன்னர் வேலைத்திட்டம் பூர்த்தியடையவில்லை எனின் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி திரும்பிவிடும் நிலை காணப்பட்டது. இந்நிலைக்கு கல்முனை மாநகர முதல்வர் எடுத்த துரித நடவடிக்கையின் பயனாய் தீர்வு காணப்பட்டுள்ளது.
கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்ஹரீஸ் பீச் பார்க் நிர்மானப் பணி எவ்வித தடங்கல்களும் இன்றி நிறைவடைவதற்கான அனுமதியினை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவரினை சந்தித்து பெற்றுக்கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :
Post a Comment