தலைவா படம் ஹிந்தியிலும் சந்திரபிரகாஷ் ஜெயின் திட்டம்.

கொலிவுட்டில் இளையதளபதி விஜய் இதுவரை நடித்த படங்களில், அதிரடியான விளம்பரங்களுடன் வெளியாக இருக்கிறது தலைவா.

அதேபோல், தமிழில் வெளியாகிற அதே நாளில் தெலுங்கிலும் தலைவா படத்தை வெளியிட உள்ளனர்.

ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், துப்பாக்கி ஆகிய படங்கள் அங்கு பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததால், தெலுங்கு ரைட்ஸே பெரிய தொகைக்கு விற்பனை செய்துள்ளார்களாம்.

அதேபோல் மலையாளத்திலும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறதாம்.

இந்நிலையில், தலைவா படத்தை இந்தியிலும் அடுத்து ரீமேக் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் திட்டமிட்டுள்ளாராம்.

தற்போது தனுஷ் ராஞ்சனாவில் இந்தியில் கால்பதித்ததைத் தொடர்ந்து அடுத்து ஜாக்பாட் என்ற படம் மூலம் பரத்தும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.

இதையடுத்து விஜய்யும் தலைவா ரீமேக் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால், தலைவா படம் ரிலீசான பின்புதான் இந்தி பதிப்பில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விபரம் முழுமையாக வெளியிடப்படுமாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :