போலி நாணயத் தாள்களின் புழக்கம் வடக்கில் திடீரென அதிகரிப்பு!

டமாகாணத்தில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதுடன்,வங்கி ஊழியர்களே அவற்றை இனங்காண்பதில் சிரமப்படுவதனால் நிதியியல் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற ஊழியர்களுக்கு போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்தியக் கிளையினால் நடத்தப்படவுள்ளது.

கடந்த சில வாரங்களாக வட மாகாணத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. போலி நாணயத்தாள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கு மேலதிகமாக போலி நாணயத்தாள் அச்சிட்ட ஒருவர் யாழ்.மாவட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து பணம் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களும் போலி நாணயத்தாளை இனங்காண்பது தொடர்பான செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்திலுள்ள சகல வங்கிகள், நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்களுக்கே இந்தச் செயல மர்வு நடத்தப்படவுள்ளது. இந்தச் செயலமர்வில் போலி நாணயத்தாளை இனங்காண்பது மற்றும் தூய நாணயத்தாள் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 9மணிக்கு யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு இடம்பெறவுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :