இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் நான்கு போட்டிகளின் முடிவில் 3-1என இலங்கை அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இன்று இறுதிப்போட்டியில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
இதில் இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, ரங்கன ஹேரத் மற்றும் லசித் மலிங்க ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இலங்கை அணி தன் சொந்த மண்ணில் வெற்றியுடன் ஒருநாள் தொடரை நிறைவு செய்யுமா அல்லது தென்னாபரிக்கா ஆறுதல் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதனிடையே நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் இளம் வீரர்களுடன் இறுதிப்போட்டியையும் வெற்றி கொள்வோம் என தெரிவித்தார்.
அதேவேளை தென்னாபிரிக்காவின் தலைவர் டி. வில்லியர்ஸ் தொடரைப் பறிகொடுத்த போதிலும் இறுதிப்போட்டியை முக்கியமானதாக கருதி வெற்றிக்காக போராடுவோம் என கூறினார்.

0 comments :
Post a Comment