இராணுவத்தினரால் பொத்துவில் பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி கையளிப்பு.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

லங்கை இராணுவத்தின் 632 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும், பொத்துவில் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகை ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இன்று (30) பொத்துவில் அஷ்ரப் ஞாபகார்த்த அதாஉல்லா அரங்கில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 632 வது இராணுவப் படைப்பிரிவு கேணல் பீ.எச்.என்.சிறிசாந்த தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி கேணல் ஹரின் வீரசிங்க, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.வாசித், பொத்துவில் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் குமார, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.இஸ்ஸடீன் மற்றும் மூவின மக்களின் மார்க்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கேணல் சிறிசாந்த பொத்துவில் ஜூம்ஆ பள்ளிவாசலுக்குரிய ஒலி பெருக்கி உபகரணங்களை அதன் பள்ளிவாசல் தலைவரிடம் வழங்கி வைத்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :