வடக்கு முஸ்லிம்களின் நிலை அறியாமல் வெகுளித்தனமாக அறிக்கை விட்ட PMGG -அப்துல் பாரி

டமாகாண முஸ்லிம்களின் நலன் குறித்தே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை வெகுளித்தனமானது என்று வவுனியா மாவட்ட இன நல்லறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

வடக்கில் முஸ்லிம்களுக்கு கடந்த 20 வருட காலமாக இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய்ப்பொத்திக் கொண்டு இருந்த இவ்வாறான அமைப்புக்கள் தேர்தல் வந்ததும்,பொட்டணி வியாபாரிகள் போன்று ஓடிவந்து வடமாகாண முஸ்லிம்கள் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளதானது. போலி நாடகம் என்பதை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

நல்லாட்சிக்கான கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நஜா முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அப்துல் பாரி மேலும் குறிப்பிடுகையில் -
வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னணியில் அன்று இருந்தவர்களில்,புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் என்பதை யாவரும் அறிவார்கள். 

அவர்களின் ஆட்சி முடிவடைந்த போதும் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் வேலையில் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஈடுபட்டுவருவதை கடந்த காலத்தில் தொடராக அவர்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.

 இந்த அறிக்கை வெளிவந்த போதும் கூட இன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க புறப்பட்டுள்ள நல்லாட்சிக்கான அமைப்பினர் எதை செய்தார்கள்,தமிழ் கூட்டமைப்புடன்,அல்லது முஸ்லிம் தலைமைகளுடன், பாதிக்கப்பட்ட சமூக தலைமைகளுடன் எத்தனை தடவை பேச்சுக்களை நடத்தினார் என்று கேட்க விரும்புகின்றேன்.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும்,மக்கள் பிரதி நிதிகளும் முஸ்லிம்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.வடக்கில் இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம் பெறுகின்றது.

அதற்கு தடையாக இருப்பவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான், இவர்களுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தப் போவதாக சகோதரர் நஜா முஹம்மத் கூறுவதானது. 

யதார்த்தம் எதுவென்று தெரியாமல் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுக்கும் பணியினை பின்னடையச் செய்யும் ஒன்றாக காணத் தோன்றுகின்றது. 

மற்றது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான அமைப்பு உடன்படிக்கை செய்யப் போகின்றது என்று தெரிவித்துள்ளது .மற்றுமொரு பெரும் துரோகத்தனமாகும். முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் இக்கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கும் அநியாயத்தை செய்ய முன்வந்துள்ளமை பெரும் விபரீதங்கள ஏற்படுத்தும்.

மன்னாரிலும்,முல்லைத்தீவிலும்,ஏன் வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களில் முஸ்லிம்களை மீள்குடியேறவிடாது முன்னெடுத்துவரும் வேலைகள் குறித்து நல்லாட்சி இயக்கத்துக்கு என்ன தெரியும்,

 வவுனியாவில் உள்ள சாளம்பைக்குளம் முஸ்லிம் கிராமம் இன்று சோபாள புளியங்குளம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை.முஸ்லிம் கிராமங்கள் பறிபோகும் அபாயம் இல்லையா? மாகாண சபையில் கூட்டமைப்பின் ஆட்சிவரும் போது,அதிகாரமில்லாத தற்போதைய தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் அதிகாரத்துடன் வந்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்.

எங்கேயோ இருந்து கொண்டு வடக்கு மக்களின் உள்ளத்தை புன்படுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதானது வடக்கில் வாழும் முஸ்லிம்களாகிய எமது இருப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை புரிந்து கொண்டு,இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநியாயத்தை நிறுத்த வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும் என்றும் வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றித்தின் தலைவர் அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :