இலங்கை அணி 128 ஓட்டங்களால் அபார வெற்றி.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.


இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இதில் மூன்று போட்டிகளில் இலங்கை அணியும் ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணியும் வெற்றி பெற்றிருந்த நிலையில், 5வதும் இறுதியுமான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இலங்கை சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 99 ஓட்டங்களையும், லகிரு த்ரிமானே 68 ஓட்டங்களையும், சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் விலாசினர்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 307 ஓட்டங்களைக் குவித்தது.

இதன்படி 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 43.5 ஓவர்களில் 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சுரங்க லக்மால் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அத்துடன் சஜித்திர சேனாநாயக்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராக டில்ஷான் தெரிவானதோடு, தொடரின் சிறப்பாட்டக்காரராக சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :