சிரியாவில் பூனைகளை சாப்பிடலாம் இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா

சிரியாவின் ஹிம்ஸ் நகர் கொடுங்கோலன் பஷ்ஷாரின் படைகளின் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை அங்குள்ள மக்கள் எதிர்நோக்குவதாக ஐ.நா வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு யுத்த நிறுத்தமொன்றை ஏற்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்தின் ஜனநாயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து மீது முஸ்லிம் நாடுகளின் கவனம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பஷ்ஷார் ஹிம்ஸ் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஹிம்ஸிற்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பட்டினி சாவை எதிர்நோக்கியிருக்கும் அம் மக்களுக்கு பூனைகளை சாப்பிடலாம் என்ற விசேட அனுமதியொன்றை வழங்கி இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா வெளியிட்டுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :