SSP மஜீட் அவர்களை மீண்டும் UNP யில் இணையுமாறு அழைப்பு-அப்துஸ்ஸலாம்

( எஸ்.அஷ்ரப்கான் )

டந்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் எஸ்.எஸ்.பி மஜீட்
தோற்கடிக்கப்படுவதையே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
விரும்பியிருந்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட
பிரச்சாரச் செயலாளர் எஸ். அப்துஸ்ஸலாம் தெரிவித்தார்.

எஸ்.எஸ்.பி. மஜீட் அவர்களை ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவதற்கான அழைப்பை
கடிதம் மூலம் விடுத்துள்ளதுடன், வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது விடயமாக தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு,

முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள்
கிழக்குமாகாண சபை உறுப்பினருமான பொத்துவிலைச் சேர்ந்த எஸ்.எஸ்.பி. மஜீட்
அவர்களை தெரியாதவர்கள் யாருமில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இவர்
ஒரு சமூக சேவையாளர் ஆவார். மனிதநேயமும், ஆளுமையும், சகல தரப்பினருடனும்
இன்முகத்தோடு பழகக்கூடியவரும், சமூகங்களின் ஒற்றுமைக்காக சிறப்பாக
செயற்பட்டவருமாகும்.

இவர் பொலிஸ் துறையில் இருக்கும்போது ஊதியத்திற்காக வேலை செய்யும் ஒரு
அதிகாரியாக இல்லாமல் தன் கடமைகளுக்கு அப்பால் சகல இன மக்களுக்கும்,
நாட்டிற்கும், பொதுச்சேவை செய்தவர் என்பதை எமது மக்கள் நன்கு அறிவார்கள்.

இவர் அரசியலிலும் வித்தியாசமாக தடம் பதித்தவர். வருமானங்களையோ, குருகிய
நோக்கங்களையோ இலக்காகக் கொண்டு செயலாற்றாமல் மக்கள் பணியே தனது
இலக்கென்று சேவையாற்றிய ஒரு அரசியல் முதிர்ச்சி பெற்ற நபராகும். ஆனால்
இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் உள்வாங்கப்பட்டதுடன் இவரது
ஆளுமையும், சேவையும் திறமையும் இக்கட்சியின் தலைவராலும், பிரதேசவாத
அரசியலாலும் மழுங்கடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளதானது வேதனையானதும்,
சமூகத்துரோகமான விடயமுமாகும்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸிற்கு 4 ஆசனங்கள் கிடைத்தும் இவர்
தோற்கடிக்கப்பட்டுள்ளது இதற்கு சான்று பகர்கின்றது.

மஜீட் வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க
வேண்டிய இக்கட்டான சூழ்நிலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு
ஏற்பட்டிருக்கும். இதனால் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு
முதலமைச்சர் பதவி சென்றடைய விரும்பாத தலைவர் மஜீட்டினுடைய வெற்றியை
விரும்பவில்லை என்பதுதான் உண்மையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும், முஸ்லிம்
தமிழ் மக்களுடைய காணிகள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்ற நிலையில்
மஜீட்டினுடைய ஆளுமையும், திறமையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு
பக்கபலமாகவும், உறுதுணையாகவும், ஆறுதலாகவும் இருக்கும். மீண்டும் நீங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவது காலத்தின் தேவையாக உள்ளது. ஆகவே
உங்களுடைய வரவை எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு வெகுவிரைவில் நல்லதொரு
பதிலை தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :