(எம்.பைஷல் இஸ்மாயில், றியாஸ் ஆதம் )
இந்திய அரசாங்கத்தினதும், மக்களினதும் நிதி உதவியின் கீழ் கிழக்கு மாகாண மக்களுக்கான இந்திய வீடமைப்பு திட்ட ஆரம்ப நிகழ்வு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவின் மங்களகம பிரதேசத்தில் இன்று 2013.05.22 ஆம் திகதி புதன்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சரகளான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வீ.முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரால் மொஹான் விஜேயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வீடமைப்பிற்கான நினைவுப் படிகத்தினை இந்தியா உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர். இதில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் பயனாளிக்கு விடமைப்பிற்கான பத்திரத்தினை வழங்கி வைத்தனர்.



0 comments :
Post a Comment