அட்டாளைச்சேனையில் உள்ளுராட்சியில் பெண்களின் பங்களிப்பு முகாமைத்துவப்பயிற்சி.


 (எம்.பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட உள்ளுராட்சியில் பெண்களின் பங்களிப்பு எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வு அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று 2013.05.22 ஆம் திகதி நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான என்.எல்.யாசிர் ஐமன் .எல்.அப்துல் முனாப், எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.ஏ.உவைஸ், , பிரதேச சபை செயலாளர் ஏ.அப்துல் சித்திக் உட்பட சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சனசமூக நிலையங்களின் தலைவர்கள், தலைவிகள் என பலரும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சியில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக விரிவான பயிற்சி வழங்கப்பட்டதுடன், சனசமூக நிலையங்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்து அவர்களின் பங்களிப்பினையும் பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளும் இங்கு ஆராயப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது, இஸ்லாமிய வரையறைகளை பின்பற்றி பெண்கள் தங்களது பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை மக்களது நலனில் அதீக அக்கரையுடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :