(எம்.பைஷல் இஸ்மாயில்)
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று (26) ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதன்படி கலை, கலாசாரம், வர்த்தகம். முகாமைத்துவம், இஸ்லாமிய கற்கை, அரபு மொழி, பொறியியல், பிரயோக விஞ்ஞானம் ஆகிய பிடங்களைச் சேர்ந்த 1750 மாணவர்கள் முதலாம் வருடத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தின் விடுதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்வுள்ளது.
இதேவேளை 4 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதியும் ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment