(எம்.பைஷல் இஸ்மாயில்)
நிந்தவூரிலிருந்து இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட சுலைமான் முகம்மட் ஸாபி நேற்று இளைஞர் பாராளுமன்றத்தின் தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சராகச் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இளைஞர் பாராளுமன்றத்தின் அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்து கொண்டு தனது சொந்த ஊரான நிந்தவூருக்கு வருகை தந்த அமைச்சர் சுலைமான் ஸாபியை நிந்தவூர் இளைஞர்களும், பொதுமக்களும் மாலை அணிவித்து வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.இஸ்மத், இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகளான எம்.ஐ.எம்.பரீட், எம்.எம்.ஹாறூன், இமாம் கஸ்ஸாலி வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முகம்மட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காரைதீவு வெட்டாற்று முகப்பிலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதேச செயலக வீதியை ஊடறுத்து, இமாம் கஸ்ஸாலி வீதி வழியாகச் சென்று மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலடியில் முடிவுற்றது.

0 comments :
Post a Comment