அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு, அமைச்சர் உதுமாலெப்பை முயற்சி.


                                                                                                 

(எம்.பைஷல் இஸ்மாயில்)
பொத்துவில் செங்காமம் மீள் குடியேற்றக் கிராமம், தென் ஆபிரிக்கா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமம், சர்வோதயக் கிராமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள வீட்டுத்திட்ட மூவின கிராம மக்களும் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த அடிப்படை தேவைகளான வீதி, மின்சாரம், விவசாயக் குளங்கங்கள் புனரமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் யானைப்பிரச்சினை போன்ற வற்றுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கிணங்க அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக குறிப்பிட்ட திணைக்களத் தலைவர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள்,  பாதுகாப்பு தரப்பினர், ஊர் முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பும், உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பான ஆலோசனைகளும், அபிவிருத்தி ஆரம்பப் பணிகளும் அமைச்சரினால் ஆரம்பித்துவைக்கப் பட்டன.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சரின் செயலாளர் எச்.எம்.அன்சார், உதவிச் செயலாளர் எம்.ஐ.சலாகுதீன், பிரதச சபையின் தவிசாளர் எஸ்.எம்.வாஸித், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் இணைப்பச் செயலாளர் ஏ.எல்.எம்.எம்பதுர்காண் மற்றும் இரானுவ பொலிஸ் பிரிவின் தலைவர்கள்,  நீர்ப்பாசனம், வீதி அவிவிருத்தி திணைக்களம், மின்சாரம், சுகதாரம், குடிநீர், வனபரிபாலனதிணைக்களம்,  இலங்கை மின்சார சபை, கல்வி திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்கள்,  உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :