கிரிக்கெட் சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக அணி தெரிவு

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பியனாக நிந்தவூர் பிரதேச செயலக அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் அதிதியாகக் கலந்து கொண்டு போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 20 பிரதேச அணிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டன. இதில் இறுதிப் போட்டிக்கு நிந்தவூர் பிரதேச அணியும், சம்மாந்துறை பிரதேச அணியும் தெரிவு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டிகள் மாத்திரம் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் அணி 12 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி பெறுவதற்கு 124 ஓட்டங்களைப் பெறத் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை பிரதேச அணி 12 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனால் 16 ஓட்டங்களினால் நிந்தவூர் பிரதேச அணி வெற்றிபெற்று அம்பாறை மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

நிந்தவூர் பிரதேச அணி சார்பாக லக்கான் விளையாட்டுக் கழக அணியினர் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதிப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஆர்.யூ.றிபாயா உம்மா கலந்து கொண்டு சிறப்பித்தார். அதிதிகளாக அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் விமலசேன, அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சித்தத் மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :