இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் காசிம் குறெய்ஷி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை செவ்வாய்க்கிழமை (21) மாலை நீதியமைச்சில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு, பரஸ்பர ஒத்துழைப்பு என்பவற்றை மையப்படுத்தியதாகவே பெரும்பாலும் அவர்களது கலந்துரையாடல் இருந்தது.
இலங்கை முஸ்லிம்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சினைகளைப்பற்றியும் கலந்துரையாடப்பட்டது. தீவிரவாத இயக்கங்கள் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அபாண்டங்கள் அறவே ஆதாரமற்றவை என்பதை அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் விளக்கிக் கூறினார்.
பாகிஸ்தான் தூதரகத்தின் கவுன்சலர் ஏ.இஸட்.சித்திகி, நீதியமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.



0 comments :
Post a Comment