ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் இன்று இரவு பாலமுனைக்கு விஜயம் செய்யவுள்ளார்.அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தரும் அமைச்சர் ஹக்கீம் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் லீடர் மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
அத்தோடு சமகால அரசியல் தொடர்பாக நீண்ட உரையொன்றையும் இங்கு ஆற்றவுள்ளார்.
மேலும்,பாலமுனைப் பிரதேசத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் தொடர்பாக மத்திய குழுவினரை சந்தித்து கலந்துரையாடவிருப்பதுடன்,பாலமுனை பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் ஆராயவுள்ளார்.அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பாலமுனை விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment