கோதபாயவுக்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்-பொதுபல சேனா.


பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டுமேன பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த சாசன அமைச்சு பௌத்த மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றத் தவறியுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்,

பௌத்த சாசன அமைச்சைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரே சிறந்த முறையில் நிறைவேற்றுவார் என பொது பல சேனா நம்புகின்றது.

தற்போது உள்ள பௌத்த சாசன அமைச்சில் இருந்து பௌத்தத்தை பாதுகாக்கும் ஒரு பயனுள்ள சேவை எதிர்பார்க்க முடியாது. அது பல மத அமைச்சின் நிலைக்கு வந்துவிட்டது, அது உண்மையான சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கிறது.

பௌத்த சாசன அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் தீர்மானம் எடுக்கப்படும்.

சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :