அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணத்தில் மாபெரும் சுழற்காற்று தாக்கியது. ஓக்லஹாமா நகரத்தின் அருகே உருவான இந்த சுழற்காற்று கிட்டதட்ட அரை கிலோமீட்டர் சுற்றளவுக்கு சுழன்றடிக்கிறது.
இதில் ஏராளமான வீடுகள் சிதறுண்டன. சுழற்காற்றின் காரணமாக ஆங்காங்கே பலத்த சப்தத்துடன் வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த சூழல் காற்றால் தற்காலிக வீடுகள், வாகனங்கள் பெரும் அழிவை சந்திக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் காற்றின் விளைவாக மணிக்கு 80 மைல் வேகத்தில் கடும் சூறைக்காற்று ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெக்சாசின் வட பகுதி தொடங்கி மினசோட்டா வரை வானிலை கடுமையாக இருக்கிறது. கன்சாஸ், மிசோரி, ஓக்லஹாமா மற்றும் நெப்ரஸ்கா பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் பேஸ்பால் அளவுக்கான ஆலங்கட்டி மழையும், பலத்த சூறைக்காற்றும் வீசி வருகிறது. சுழல்காற்றால் சிதறடிக்கப்படும் பொருட்கள் மக்களுக்கும் விலங்குகளுக்கும் உயிர்சேதத்தை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை வரையிலான நிலவரப்படி, ஓக்லஹாமா பகுதிகளில் 3 சுழற்காற்றுகள் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment