இறக்காமத்தில் நூல் வெளியீட்டு விழாவும், மார்க்கச் சொற்பொழிவும்.

ஏ.எச்.எம்.இம்தியாஸ்

மாணவன் முஸ்தபா இன்ஸாப் எழுதிய 'மனித வாழ்க்கைப் பயணம்' குறிக்கோள் என்ன? என்ற நூல் வெளியீட்டு விழா 2013.05.25ம் திகதி இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் எச்.எல்.எம்.றிஸ்லி (அன்வாரி) அவர்களின் தலைமையில் மாலை 3.30 மணிக்கு இடம் பெற்றது.

பிரதம அதீதிகளாக யு.எல்.உவைஸ் - உதவிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர் கல்வி அமைச்சு, இசுறுபாய மற்றும் எஸ்.எல்.பாறூக் - சட்டத்தரணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏனைய அதீதிகளாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் இறக்காமம் ஜும்மாப் பள்ளி வாசல் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், இறக்காமம் உலமா சபை தலைவர், செயலாளர்களும் லெந்து கொண்டனர். 

மார்க்க சொற்பொழிவாளர் எம்.ஏ.அமீறுல் அன்சார் (மக்கி) அவர்களினரல் மார்க்க சொற்பொழிவு நடாத்தப்பட்டது. இந்நூலின் முதற் பிரதியை இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் பெற்றுக் கொண்டர். 

கௌரவ பிரதியை முஸ்தபா இன்ஸாப் இன் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். அதீதிகளின் உரையினைத் தொடர்ந்து நூலாசிரியர் முஸ்தபா இன்ஸாப் இன் நன்றியுரையுடன் இவ்விழா இனிதே நிறையுற்றது.
 (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது).






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :