திருகோணமலையில் இருந்து ஸ்ரீலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போர் நடத்த திட்டம்-சம்பிக்க

திருகோணமலையில் இருந்து சிறிலங்காவுக்கு எதிராக இலத்திரனியல் போரை நடத்தத் திட்டமிடுவதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் அமெரிக்கத் தூதரகத்தினால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கன் கோணர் தொடர்பாக, ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அவர், திருகோணமலை தந்திரோபாய ரீதியாக முக்கியமான இடம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

“துப்பாக்கிகள், ரவைகள், ஏவுகணைகள், ஆளில்லா உளவு விமானங்கள் போன்ற மரபுரீதியான ஆயுதங்களுக்கு மேலதிகமாக, இலத்திரனியல் போர் முறையிலும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.

இத்தகைய தநடவடிக்கைகள் ஆபத்தில்லாதது போன்ற தோற்றப்பாட்டைக் கொண்ட அமெரிக்கன் கோணர் அல்லது, ஆழ்கடல் கனிம வளங்களை மைப்படுத்திய விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டங்கள் போன்ற தோற்றப்பாட்டைக் கொண்ட இடங்களில் இருந்தே செயற்படுத்தப்படுகின்றன.

பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டின் எந்தவொரு இடத்திலும், வெளிநாட்டு தூதரகங்கள் தமது செயற்பாட்டுத் தளங்களை அமைக்க இடமளிக்கப்படக் கூடாது.

அவ்வாறு அமைக்கப்படும் தளங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும்.” என்றும் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :