இளைஞர் யுவதிகள் ஆர்வமுடன் வாக்களிக்கும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்.


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (04) இடம்பெறுகின்ற இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கான தேர்தல், தற்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகிறது. 
இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இளைஞர், யுவதிகள் ஆர்வமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. 


குறித்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கு காத்தான்குடியிலிருந்து காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா இளைஞர் கழக தலைவர் முகம்மட் மஸூத் சுஜாத் அஹமட், ஐமர்ஸ் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் முகம்மட் முஸ்தபா முஹம்மட் றுஹைல் ஆகிய இருவருக்கும் இருமுனைப் போட்டி இடம்பெறுவதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்சி தெரிவித்தார். 



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இன்று நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 412 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவற்றில் பிரதேச செயலகப் பிரிவுகள் ஊடாக 332 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் ஏனைய ஆசனங்கள் ஆதிவாசிகள், அங்கவீனர்கள், மாவட்டங்கள் ரீதியாக பல்வேறு சேவைகளை ஆற்றியவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா ஒருவர், செனட் சபை என பலருக்கும் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி எம்.றம்சி மேலும் தெரிவித்தார். 



நாடளாவிய 334 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இன்று தினம் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :