ஊவா மாகாணத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பூஜ்யமாகவே உள்ளது. மாகாண சபையிலோ பாராளுமன்றத்திலோ முஸ்லிம் அரசியல் பிரதிநிதிதுவமொன்று பெறமுடியாமல் உள்ளது துரதிர்ஷ்டமாகவே கருதபடவேண்டியுள்ளது . மலையகத்தில் சிரும்பான்மையினமான தமிழ் முஸ்லிம்கள் நாம் அரசியல் ரீதியாக ஒன்றிணையாத வரை எமக்கு விமோசனம் இல்லை.
ஒரே மொழியை பேசும் நாம் அரசியல் ரீதியான அடைவுகளுக்காகவும் , எமது கல்விரீதியான அடைவுகளையும் நோக்காக வைத்து நாம் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும. தேர்தல் காலங்களில் எமது அரசியல் சிந்தனைககள் பல துருவங்களாக செயற்படுத்தபடுவதன் விளைவுகளையே இப்போது நாம் எதிர்கொள்கிறோம் ,”. என்று பசறை தேர்தல் தொகுதி ஆளும்கட்சி பிரதான அமைப்பாளரும்,ஜனாதிபதியின் இணைப்பாளருமான திரு வடிவேல் சுரேஷ் அவர்கள் தெரிவித்தார்கள் .
லுணுகலை ,ப / அல் – அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ , எம் எம். முஸம்மில் தலைமையில் நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையில் மேற்படிகருத்து தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் ,
“ கடந்த சுமார் ஒருவருடதிட்குமுன் நான் இப்பாடசாலைக்கு சமூகமளித்தேன் . அப்போது பல பிரச்சினைகள் இப்பாடசாலையில் காணப்பட்டது. இப்பாடசாலைக்கு அதிபராக இந்த அதிபர் மூஸம்மில் அவர்களை கேட்டு பசறை வலய கல்விப் பணிப்பாளரை பாடசாலையில் அடைத்துவைத்து போராட்டம் நடத்தினார்கள். அந்த பிரசினைகளும் உங்களுக்குள் ஏற்பட்ட பிரிவினைகளால் ஏற்பட்டதாகும்.

அப்போதும் நாங்கள் இந்த பாடசாலைக்கு வந்தோம் உங்களின் வேண்டுதலின் படி தீர்வுகளை பெற்றுத் தந்தோம் . இப்போது உங்கள் பாடசாலையில் நல்ல பல மாற்றங்கள் நடைபெற்று இந்த வருட மாணவர்களின் திரமைகள்அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறும்
இந்த நிகழ்வுக்கும் உங்களின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன் . இந்த வருட க. போ. த. (சா /த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள் .
அதே பிள்ளைகளை இந்த பாடசாலையிலேயே உயர்தரம் கற்பிக்க வேண்டிய அவசியத்தை வேண்டுகோளாக இப்போது முன்வைத்துள்ளார்கள் . இந்த தேவைகளை காலத்தின் தேவையாக நான் கருதுகின்றேன் . பசறை கல்வி வலயத்தில் மொத்தம் 84 பாடசாலைகள் உள்ளன . அதில் 42 தமிழ் மொழிமூல பாடசாலைகளாகும் . அதிலும் இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன .

ஒன்று, இந்த ப /அல் அமீன் முஸ்லிம் வித்தியாலயம் , மற்றையது ப/ பசறை முஸ்லிம் வித்தியாலயம் . நான் இத்தேர்தல் தொகுதியின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையிலும் ஒரு சிறும்பான்மை பிரதிநிதி என்ற வகையிலும் குறிப்பிட்ட இந்த இரண்டு பாடசாலைகளிலும் உயர்தரபிரிவை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இவருடமுதல் குறிப்பிட்ட வகுப்புகளை நடாத்த ஏற்பாடுகளை செய்து தருவேன் “ என்றும் கூறினார்.
மேற்படி நிகழ்வில் பதுளை மாவட்ட ஸ்ரீ ல சு க முஸ்லிம் அமைப்பாளர் அல் ஹாஜ் எம் எச் எம் முபாரக் அவர்களும், லுணுகலை பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் ஜனாப் எம் ஜரூக் அவர்களும், பசறை ஜம்மியத்துல் உலமா செயலாளர் மௌலவி எஸ் எம் ஆசிக் அவர்களுட்பட ஊர் முக்கியஸ்தர்களும் பெற்றார்களும் கலந்துகொண்டனர் .

0 comments :
Post a Comment