நேற்று (21.05.2013) காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற வாகன விபத்தில் காயப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மின்சாரக் கொங்றீட் கம்பங்களை ஏற்றிக் கொண்டு கல்முனையை நோக்கி சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதியினூடாக அம்பாரையில் இருந்து வருகை தந்து கொண்டிருந்த கனரகப் பொருட்களை ஏற்றும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் உள்ள ஆற்றுக்குள் இறங்கியுள்ளது.
இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வானத்தின் சாரதியான சந்தன (33) என்பரும், உதவியாளரான எஸ்.ஏ.குலரத்ன(45) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளானார்கள். இவர்கள் அம்பாரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வானத்தின் சாரதியான சந்தன (33) என்பரும், உதவியாளரான எஸ்.ஏ.குலரத்ன(45) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளானார்கள். இவர்கள் அம்பாரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே எடுப்பதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஏற்பட்டன. சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

0 comments :
Post a Comment