கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு இலவசபோக்குவரத்துக்கான ‘பாஸ்’ - ஆரிப் சம்சுடீன்

கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்துக்கான ‘பாஸ்’ வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தக் கோரும் தனிநபர் பிரேரனையொன்றை இன்று (21) நடைபெறும் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின்போது முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

இத்தனிநபர் பிரேரனை தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது;


கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த தொழில்வாண்மை ஊடகவியலளர்களின் செய்திச் சேகரிப்பைக் கருதியும் தொழில்வாண்மை விருத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தவும். கிழக்கில் ஊடகச் சேiவை மேம்படுத்தும் பொருட்டும் கிழக்கு மாகாணதுக்குள் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்; பஸ்களில் பிரயாணக் கட்டணமின்றி தமது கடமைகளுக்குச் செல்வதற்கு இலவசப் ‘பாஸ்’ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊடகவிலாளர்கள் என்னிடம் பல தடைவ கோரிக்கை விடுத்துள்ளனர்.


அவர்களின் கோரிக்கையைக் கருதியே இன்று(21) கூடும் கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வின்போது இத் தனிநபர் பிரேரனையை முன்வவைக்கவுள்ளேன்.


ஊடக சுதந்திரத்தினூடாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்துக்துக் கொண்டு வந்து உரியவர்களின் கவனத்தை அதில் ஈர்க்கச் செய்து, அதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான தார்மீகப் பொறுப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஊடக சேவை புரிகின்றனர்.


இருப்பினும், இத்தகைய சேவையாற்றும் ஊடகவிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் தீர்த்து வைக்கப்படுவதும் அவசியமாகும். அதற்கு உதவுவது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கும் அதில் பங்குண்டு என அவர் குறிப்பிட்டார்


கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மாத்திரமின்றி நாடு தழுவிய ரீதியில் ஊடக சேவை புரியும் ஊடகவிலாளர்கள் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனனும் சவால்களுடனுமே ஊடகப் பணியினை புரிந்து வருகின்றனர்.


குறிப்பாக கிழக்கு மாகாண ஊடகவிலாளர்கள் தாங்களுக்கு கிழக்கு மாகாண அமர்வுகளில் செய்தி சேகரிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் தங்குவதற்கான தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படுதல் அவசியமெனவும் அரச தொழில் புரியாத பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல் வேண்டுமென்றும் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன் iவைத்துள்ளனர்.


அவர்களின் எல்லாக் கோரிக்கைகளையும் குறிய காலத்துக்கள் நிறைவேற்ற முடிhயாத போதிலும் முடியுமான கோரிக்கைகளை கிழக்கு மாகாண சபையினூடக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதமாகவும் இதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே இலவச பயணத்துக்கான பாஸ் வழங்கும் நடைமுறையை க்pழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்கான அங்கீகாரத்தைப் ஊடகவிலாளர்களுக்குப் பெற்று கொடுக்க இந்தத் தனிநபர் பிரேரனையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஊடகவிலாளர்களுக்கு இலவச பயணத்துக்கான பாஸ் வழங்கும் நடைமுறை மேல் மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :