தம்புள்ளை புனித பூமி அரசினுடையதே தவிர விகாரையுடையதல்ல-இனாமளுவே தேரர்


ம்புள்ளை புனித பூமி திட்டமானது அரசினுடையது எனவும் அது விகாரையுடையது அல்லவெனவும் ரங்கிரி தம்புள்ள விகாரையின் விகாராதிபதி இனாமளுவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

உயன்வத்த விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் கீழ் குறித்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படும் நிலையில் தம்புள்ளை பிரதேச அரசியல் தலைவர்கள் சிலர் தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

1982 இல் ஆரம்பிக்கப்பட்ட புனித பூமி செயற்திட்டத்தை ஒரு வருடத்துக்குள் நிறைவு செய்ய ஜானாதிபதி நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு உத்தரவிட்டதாகவும் சோற்று பெக்கட்டுக்களுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டு சிலர் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் இதன்போது இனாமளுவே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :