உங்கள் சொந்த காரை மற்றொருவருக்கு விற்பதில் என்ன தடை? கத்தார் நாட்டில் இருக்கிறது.
அங்கே தமது சொந்த காரை விற்பதற்கு காரில் ‘for-sale’ என்ற அறிவிப்பை மாட்டி வைத்திருப்பவர்கள், அதற்கு பக்கத்தில் மற்றொரு அறிவிப்பை காண நேரலாம். ‘5,000 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற டிக்கெட் வைக்கப்பட்டிருக்கும்.தனிப்பட்ட கார் உரிமையாளர்கள், கார் ஷோரூமுக்கு வெளியே தமது கார்களை விற்பனை செய்ய முடியாது என்ற சட்டத்தை மிகக் கடுமையாக அமல் செய்யப் போகிறார்கள் அங்கே.
“தலைநகர் தோஹா முனிசிபாலிடியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாடு முழுவதும் கடுமையாக அமல் செய்யப்படும்” என்கிறார், தோஹா பப்ளிக் கன்ட்ரோல் பிரிவின் தலைவர் அலி அல்-ஹஜீரி.“யாருக்கும், எந்த விதிவிலக்கும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச அபராதமாக 5,000 ரியால் விதிக்கப்படும் காரணம், இந்த சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்பதற்காக தான்.

கத்தார் முழுவதிலும் கார் விற்பனை ஷோரூம்கள் உள்ளன. அங்கே சென்று கார்களை விற்கவோ, வாங்கவோ முடியும். அதையே அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
“தோஹா பகுதியில் பயன்படுத்தப்படாத 8,200 கார்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எமது துறையினர் கணக்கெடுத்துள்ளனர்” என்று கூறியுள்ள அவர், “அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை கரேஜ் உரிமையாளர்கள் மீது பாயவுள்ளது. கரேஜூக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதே அந்த திட்டம்” என்கிறார்.

0 comments :
Post a Comment