மின்சாரம் வழங்க முடியாத பின்தங்கிய பிரதேசங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் நிகழ்வு.

 (சலீம் றமீஸ்)
கிழக்கு மாகணத்தில் மின்சார இணைப்பு வழங்க முடியாத பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற வறிய மக்களின் நன்மை கருதி கிழக்கு மாகாண கிராமிய மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்ச்சியினால் சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்காமம் கிராமம், இரண்டாம் கட்டை, நான்காம் கட்டை, கோமாரி செல்வபுரம் போன்ற கிராமங்கலுக்கான சூரிய ஒளி மின்சாரம் வழங்கபட்டது

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கிராமிய மின்சாரம், வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சரும், கிழக்கு மாகாண சபை பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உதவி செயலாளர் எம்.ஜ. சலாஹுத்தின், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம.தௌபீக், அமைச்சரின் பொதுசனதொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர், இணைப்பு செயலாளர் யு.எல்.உவையிஸ், உள்ளுராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான் உட்பட அமைச்சின் அதிகாரிகள்,முக்கியஸ்தர்கலும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :