கிண்ணியாவில் பெண் ஒருவரின் வயிற்றுனுல் ஊசியினை வைத்து அறுவை சிகிச்சை.

கிண்ணியா மஃறூப் நகரினை சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்யும் போது ஊசியினை வைத்துத் தைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்குப் பின் குறித்த பெண் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக 2013.05.22 ஆம் திகதி வைத்தியசாலைக்குச் சென்று அப் பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். இதன் போது வயிற்றுப் பகுதிக்குள் ஊசி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அப் பெண் வயிற்றுக்குள் இருக்கும் ஊசியினை வெளியே எடுப்பதற்காக மீண்டும் அறுவை சிகிச்சைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

கிண்ணியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் நடந்து கொண்டு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :