
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், இது விடயத்தில் சகலரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமென குறிப்பிட்டுள்ளார்.
சகல மதங்களும் கருத்திற்கொள்ளப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது என தெரிவித்துள்ள பிரதமர் இத்தகைய சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் வேறு எங்கும் கிடையாது எனகுறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment