ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான சமூக ஊடகங்களின் ஒழுக்கம் எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு சனிக்கிழமை (25.05.2013) காத்தான்குடி நியு கடாபி ஹோட்டலில் ஆரம்பமானது.
இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையுடன் ஆரம்பமான இச்சசெயலமர்வில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 35 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கு பற்றியுள்ளனர்.
இச்செயலமர்வில் ஊடகத்துறையின் உயர் பதவிகளில் உள்ள பலரும் வளவாளர்களாக கலந்துகொள்வதுடன், இச்செயலமர்வின் இறுதியில் பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.




0 comments :
Post a Comment