நாட்டில் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது சம்மந்தமாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் ஊடகத்துக்கு வழங்கிய தனதறிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
வெசாக் தினத்துக்கு தொந்தரவுகள் தருவதாகக்கூறி புத்தள நகரில் 38 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது.
புத்தள நகரில் சுற்றித்திரிகின்ற நாய்களுக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் யாருடைய செயல் அநியாயமாக் கொல்லும் எந்த தேவையும் முஸ்லிம்களிடம் இல்லை.
அமைச்சர் விமல் வீரவன்ச அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்களும் , இந்துகளும் மிருகங்களை கொல்வதை வெறுப்புடன் நிராகரிக்கின்றனர். நாட்டில் சிறு தொகையினர் மட்டுமே அதற்கு ஆதரவு வழங்கு கின்றனர்.
அப்படியானால் கொல்லப்பட்ட 38 நாய்களின் உடல்களையும் புத்தள நகரசபை ஊழியர்கள் அகற்றியுள்ளதாக புத்தள பிரதேசபையின் தலைவர் தமயந்த தொலேவத்த தெரிவித்திருந்தார்.
எனவே அவரிடமே கேட்டறிந்து கொள்ளலாம் அமைச்சர் விமல் வீரவன்ச உயிர்களை அநியாயமாகக் கொன்றது யார் எதுக்கு கொன்றார்கள் என்ற விடையத்தினை கேட்டறிந்து கொள்ளலாம்.
மிருகங்களைக் கொல்வது என்பது வேறு உணவுக்காகப் பயன் படுத்துவதென்பது வேறு, ஆனால் அண்மையில் ஐநா வின் அறிக்கையில் உலகில் உணவுத்தட்டுப்பாடு மிக அதிகமாக உள்ளதால் மக்கள் அனைவரும் பூச்சி, புழுக்களை எல்லாம் சாப்பிடுங்கள் என்று தெரிவித்திருந்தமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
மக்களுக்கே உண்ண உணவுத்தட்டுப்பாடு இருக்கின்ற பொழுது மிருகங்களை கறிக்காக மனிதன் பயன் படுத்தாது இன்னும் உயிர் வாழவிட்டால் இன்னும் உணவின் தேவைகள் மிக அதிகமாகும் என்பதனை இந்த அமைச்சர் விமல் வீரவன்ச அறியவில்லையா..?
கண்டியில் தீக்குளித்த பெளத்த பிக்கு எதற்காக தீக்குளித்தார் என்பது பற்றி யாரும் சரியாகத் தெரிவிக்கவில்லை, ஆனால் வெசாக் தினத்தில் கொல்லப்பட்ட 38 நாய்களின் கொலையின் எதிர்ப்புத்தான் என்றும் ஒரு வட்டாரம் கூறுகின்றனர்.
புத்தள யுதகனாவ ரஜமகா விகாரையில் நடைபெற்ற வெசாக்தின கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடனின்போது நகரில் சுற்றித்திரியும் நாய்களின் தொந்தரவு பற்றி ஆராயப்பட்டுள்ளது.
எனினும், மேற்படி நாய்களை நஞ்சூட்டிக் கொலைசெய்தமை குறித்து விசாரணைகள் நடத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், மேற்படி நாய்களை நஞ்சூட்டிக் கொலைசெய்தமை குறித்து விசாரணைகள் நடத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே மிருகங்களை அநியாயமாகக் கொல்லாமல் தேவைக்கேற்றவகையில் மட்டும்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துவது இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம் என்பதனையும் இந்த அறிக்கை மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். என்றும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment