(எம்.பைஷல் இஸ்மாயில்)
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டாளைச்சேனை பொரிய பள்ளி வாசல் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றை இணைக்கும் மிகப் பிரதான வீதிக்கு அருகாமையில் மிக நீண்ட நாட்களாக காணப்படும் வடிகான் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் உடைக்கப்பட்டு இது வரைக்கும் செப்பனிப்படமால் இருப்பதையிட்டு குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை சனலிங் சென்றருக்கு முன்னால் உள்ள இச்சந்தியில் அமையப்பெற்ற இந்த வடிகானை செப்பனிடும் நோக்கில் மஹிந்த ரரிபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்கா திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கொங்றீட் வீதி மர்ஹூம் றமீஸ் எச்.எஸ் வீதி என பெயர் சூட்டப்பட்டு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பிட்ட இப்பாதையையும் வடிகான் செப்பனிடும் பணியினை ஆரம்பித்து வைப்பதற்காக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர். இது ஆரம்பித்து வைத்து பல மாதங்கள் கடந்தும் இன்னும் செப்பனிப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இச் சந்தி மிக முக்கியத்தும் வாய்ந்ததால் இதனால் செல்லும் வாகனச் சாரதிகள் மிக சிரமத்துக்கு மத்தியில் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் இச்சந்தியில் பல நூற்றுக்கணக்கான விபத்துக்கள் இடம்பெற்று வருவதோடு, மழை காலங்களில் நீர்நிரம்பி வழிகின்றது. தற்போது இவ்வடிகானில் நீர் தேங்கி நிற்பதனால் டொங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதால் பிரதேச வாசிகள் அச்சம் கொண்டுள்ளனர்.
பிரதேச வாசிகள் இவ்விடயம் தொடர்பில் பல முறைப்பாடுகள் செய்திருந்த இந்நிலைமையை கவனத்திற் கொண்ட உள்ளூர் வெளியூர் அரசியல் வாதிகளும் விதி அபிவிருத்தி தொடர்பான உயர் அதிகாரிகள், உத்தியோத்தர்கள் வந்து பார்த்தும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.
எனவே இதனை ஆரம்பித்து வைத்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை வாழ்கின்ற ஊர் என்பதனாலும் குறிப்பிட்ட அபிவிருத்தி தொடர்பான மாகாண அமைச்சர் என்பதனாலும் பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை முன்வைத்து இந்த வீதியையும், வடிகானை உடனடியாக செப்பனிட்டுத் தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வாழும் ஒரு பொதுமகனாகவும், குறித்த அபிவிருத்தி தொடர்பான மாகாண அமைச்சராகவும் இருக்கும்எம்.எஸ்.உதுமாலெப்பையின் கவனம் மிக தீவிரமாக திரும்பி இக்குறைபாட்டையும் மக்களுக்கு டெங்கு நோய் பரப்பக்கூடிய ஓரு அபாய நுளம்பிலிருந்தும் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்வரும் காலங்களில் அவரின் அரசியல் வாழ்க்கையும், இன்னும் பல அமைச்சுப் பொறுப்பில் இருக்கும் சந்தர்ப்பத்தையும் பொதுமக்கள் வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்பது திண்ணம்.



0 comments :
Post a Comment