இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கும் இச்சிறுமிக்கு உதவி செய்வோம்.


ருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்க்கு பரிதவிக்கும் 4வயது சிறுமிக்கு உதவ முன்வாருங்கள்:மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயன்னோடை பத்ர் பள்ளிவாயல் மஹல்லாவைச் சேர்ந்த கட்டிட வேலை செய்யும் எம்.அமீன் என்பவரின் மூன்றாவது மகள் பாத்திமா நிஷா எனும் 4வயது சிறுமி கடந்த மூன்று வருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமியை பரிசோதித்த பிரபல வைத்திய நிபுனர் சிஹான் பெரயரா இவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ,அதற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் கட்டிட வேலை செய்யும் எம்.அமீன் ,அவரது மனைவி வை.சர்மிளா மற்றும் அவர்களது குடும்பத்தினால் இவ்வளவு பெரும் தொகைப் பணத்தை திரட்ட முடியாதுள்ளதாகவும் ,தனவந்தர்கள்,பண வசதி படைத்த சகோதரர்கள் ,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை தந்துதவுமாறு அவர்களது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுகின்றனர்.

காங்கேயன்னோடை 13 பத்ர் பள்ளி வீதியில் வசிக்கும் எம்.அமீனுக்கு 11மற்றும் 8 ஆகிய வயதில் இரண்டு ஆண் பிள்ளைகளும் 4மற்றும் 1 ஆகிய வயதில் இரண்டு பெண் பிள்ளைகளுமாக மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் பின்வரும் கணக்கு இலக்கத்திற்கு அனுப்பவும்.

தொடர்புகளுக்கு முஸ்தபா அமீன் சிறுமியின் தந்தை-0771384815

பெயர் :முஸ்தபா அமீன்
கணக்கு இலக்கம்:73521134
தேசிய அடையாள அட்டை இலக்கம்:810020504V
வங்கி :இலங்கை வங்கி
வங்கிக் கிளை-இலங்கை வங்கி ஆரையம்பதி கிளை

NAME-MUSTHAFA AMEEN

BANK A/C NO-73521134

BANK-BANK OF CEYLON.(BOC)

NIC-810020504v
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :