ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 1,000 இடைநிலைப் பாடசாலைகளை புனரமைக்கும்
தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப்
வித்தியாலயத்தில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவும்,
புனர்நிர்மான அங்குரார்ப்பணமும் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்
திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி
ஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் பிரதம
அதிதியாகக் கலந்துகொண்டதுடன் புனர்நிர்மாண வேலைகளை அங்குரார்ப்பணம்
செய்து வைத்தது, சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல்லையும் நாட்டி
வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்
யு.எல்.எம்.ஹாஸிம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,
சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம். சலீம், வர்த்தகர் முபாறக்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
'மஹிந்த சிந்தனையின்' எதிர்கால நோக்குக்கு இணங்க அபிவிருத்தியை மையமாகக்
கொண்ட இலக்குகளை அடைந்து கொள்வதற்காக 5,000 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும்
1,000 இடைநிலைப் பாடசாலைகளை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்
கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கல்வி
அமைச்சு, மாவட்ட மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் வழிகாட்டலில்
இந்நிகழ்வு நடைபெற்றது.
0 comments :
Post a Comment