அவுஸ்திரேலியாவை சேர்ந்த Reinhard Kleindl என்ற 32 வயது நபர் இரண்டு பெரிய கட்டிடங்களுக்கிடையே கயிறு கட்டி 185 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் நடந்து உலக சாதனை படைத்தார்.
எவ்வித பிடிப்பும் இன்றி இவர் நடந்து வருவதை பெரும் பரபரப்புடன் பொதுமக்கள் பார்த்தனர்.தனது கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து எவ்வித பிடிப்பும் இன்றி 30மீட்டர் தூரத்திற்கு இவர் நடந்து வந்ததுதான் உலகிலேயே முதன்முதலாக செய்யப்படும் சாதனையாக கருதப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் பாரீஸ் நகரத்தில் es Mercuriales twin towersஎன்ற கட்டிடங்களுக்கு இடையில் 120 மீட்டர் உயரத்தில் நடந்து வந்ததுவே இதுவரை உலக சாதனையாக கருதப்பட்டு வந்தது.
இந்த சாதனையை முடித்தவுடன் Reinhard Kleindl சர்வசாதாரணமாக தனது நண்பர்களுடம் எவ்வித அலட்டலும் இன்றி காரில் ஏறி சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

0 comments :
Post a Comment