பொத்துவிலில் தென் ஆபிரிக்கா வீட்டுத்திட்ட கிராமத்தில் 50 வீடுகள்.

(சலீம் றமீஸ்)
பொத்துவில் தென் ஆபிரிக்கா வீட்டுத்திட்ட கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தென்னாபிரிக்கா அமைப்பொன்றினால் அமைக்கப்பட்ட 50 வீடுகளின் தற்போதைய நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும், இவ்வீடுகளை மீள் நிர்மாணம் செய்வதற்கு உகந்ததாக இருந்தால் அதற்கான மதிப்பீட்டறிக்கையையும் மேற் கொள்ளுமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கிழக்கு மாகாண வீடமைப்பும் நிர்மாணமும்,வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உத்தரவிட்டார்.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தென்னாபிரிக்கா வீட்டுத்திட்ட கிராமத்தில் வாழும் குடும்பங்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நேரில் கேட்டறிவதற்க்காக அங்கு விஜயம் செய்த அமைச்சரிடம் சுனாமிக்கு பின்னர் வழங்கப்பட்ட வீட்டின் கூரைகள், நிலை, கதவு, ஜன்னல்கள் சேதமடைந்துவருவதாகவும், இதனால் பிள்ளைகளுடன் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இக்கிராம மக்கள் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

இதனையடுத்தே அமைச்சர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் உள்ளக வீதி அபிவிருத்தி,குடிநீர் வசதி, வாழ்வாதார உதவி, பள்ளிவாசல் கட்டுமானபணிகள், புதிய பாடசாலை அமைத்தல் போன்ற இன்னும் பல தேவைகளை இம்மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். இவைகளையும் மேற்கொள்வதற்க்கு அமைச்சர் சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

இக்கிராமத்திற்கு இரண்டாவது முறையாகவும் வருகைதந்து மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த ஒரே ஒரு அமைச்சர் நீங்களே என இக்கிராம மக்கள் அமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், உள்ளுராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பதுர்கான், நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளர் ஹைதர் அலி, ஜெய்கா திட்டத்தின் நீர் வழங்கல் முகாமையாளர் நஸீர,; பொறியியலாளர் நௌசாத் உட்பட முக்கியஸ்தரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :