சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை.

வுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி இலங்கை பிரஜைகள் நாடு திரும்ப வேண்டும் என அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவில் கடமையாற்றிறும் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலத்திற்கு பின்னதாகவும் சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என சவுதி அரேபிய சட்டம் கூறுவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்பும் முகமாக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் 24 மணிநேரமும் தனது சேவையை வழங்குவதாக அமைச்சர் கூறினார்.

இந்நிலையில் சவுதியிலுள்ள இலங்கையர்கள் 400 பேர் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :