நாட்டில் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு எழுதியுள்ள விசேட கடிதத்தில் தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த தேரர் தீ குளித்தமையை ஆதாரமாக கொண்டு நாட்டினுள் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், நாட்டில் பெரும்பான்மையான பௌத்தர்களும் , இந்துகளும் மிருகங்களை கொல்வதை வெறுப்புடன் நிராகரிக்கின்றனர். நாட்டில் சிறு தொகையினர் மட்டுமே அதற்கு ஆதரவு வழங்கு கின்றனர் . ஜனாதிபதி நாட்டில் மிருகங்களை கொல்வதற்கு உடனடியாக தடை விதிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment