பாகிஸ்தான் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாடசாலைச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

அந்த பேருந்து இஸ்லாமாபாத் நகரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் குஜராத் நகர் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

இதில், ஆசிரியர் ஒருவர் மற்றும் 17 சிறுவர்கள் பலியாகியுள்ளனர். 

இதேவேளை காயமடைந்த 7 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பத்தை தொடர்ந்து பஸ் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

எரிவாயு சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு அதில் இருந்து தீப்பற்றியிருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :