எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த சவூதி அரேபியப் பெண்.

வரெஸ்ட் சிகரத்தில் ஏறி சவுதி அரேபியா பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார். ராஹா முஹாராக் எனப்படும் 25 வயதான பெண்ணே நேபாளத்திலுள்ள உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து , தனது இலக்கை நிறைவுசெய்துள்ளார். சவுதி அரேபியாவில் பெண்கள் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து, அந்நாட்டிலிருந்து முதலாவது பெண், சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளமைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ராஹா, எவரெஸ்ட் சிகரத்துடன், உலகின் 7 மலைச்சிகரங்களை அடைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தனது சாதனையால், தனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், சிறந்த கௌரவத்தை வழங்கியுள்ளதாக ராஹா கருத்து வெளியிட்டுள்ளார்.

ராஹாவுடன், மேலும் 3 பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக பீ பீ சீ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை அண்மையில் சவுதியில் பெண்கள் , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :