(நேர்காணல்: ஸிராஜ் எம். சாஜஹான்)
கேள்வி: தற்போதைய இனவாத செயற்பாடுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இன்றைய இனவாத செயற்பாடுகள் எல்லாம் தற்செயலானவையல்ல. நன்றாக திட்டமிடப்பட்ட நீண்டதோர் நிகழ்சி நிரலில் தற்காலத்துக்குரிய தீர்மானிக்கப்பட்ட றிகழ்வுகளே அவை. பேரினவாத கடும் போக்கு அடக்குமுறையின் வெளிப்பாடான தனிச் சிங்கள அமுலாக்கத்தின் மீது கொண்ட வெறுப்பை வெளிக்காட்டத் துணிந்த ஒரு சத்வீகப் போராட்டம். வட்டுக்கோட்டையில் உருமாறி இன்று ஜெனிவா வரை பயணித்துள்ளது.
பேரினவாதப் போக்குக்கு எதிரான போராட்டம் சாத்வீகமானதாக ஆரம்பித்து ஆயுதவடிவமெடுத்து பின்னர் பயங்கரவாதத் தோற்றத்துடன் ஆட்டிப் படைத்து 9/11 க்குப் பின்னர் சர்வதேச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு உலக நாடுகளின் இருக்கிய பிடிக்குள் மாட்டுப்பட்டு தன்னையும் தன் சமூகத்தினையும் காவு கொண்ட வரலாறுதான் வெளிப்படையானது. ஆனால் ஒவ்வொரு திருப்பு முனையிலும் திட்டமிடப்பட்டவாறு காய்கள் நகர்த்தப்பட்டு நன்றாக இயக்கப்பட்ட ஒரு முடிவையே பெரும்பான்மை சமூகம் பெற்றிருக்கிறது என்று நினைக்கின்றேன்.
எனவேதான் போர் முடிந்த கையோடு இன்னுமொரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்குள் நாம் நகர்த்தப்படுவதாகவே நான் நினைக்கின்றேன். போர் முடிந்தால் சமாதானம் வரும் சமூக நிலை தோன்றும் என்ற எதிர்பார்ப்புடன் போரை முடிப்பதற்கு உதவிய சகல சக்திகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டு எல்லாளன் துட்டகைமுனு வரலாறும் 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரமும் மீட்டப்படுவதனை நோக்கும் போது நாம் இன்றும் ஒரு காய் நகர்த்தலுக்குள் ஆட்கொள்ளப்பட்டுள்ளோமா என்று எண்ணத் தோன்றுகின்றது. எவை எண்ணம் பிழையாக இருக்க வேண்டும் என ஆல்லாஹ்வை இறஞ்சுகின்றேன்.
கேள்வி: மு.கா. இச்செயல்பாடுகளை எவ்வாறு நோக்குகின்றது?
பதில்: இச்செயல்பாடுகள் மிகவும் ஆபத்தானவை. ஆணித்தரமாக எதிர்க்கப்பட வேண்டியவை. அரசியல் சார்ந்த விடயங்களில் நாம் காட்டும் அசமந்தப் போக்கினை நமது மதம் சார்ந்த விடயங்களில் காட்டக் கூடாது. அதனால்தான் நாம் கூட்டு முயற்சிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம். அரசியல் கலப்பு இவ்விடயத்தில் இருக்கக்கூடாது என்பதனால் தான் நாம் மிகவும் அவதானமாக நடந்துள்ளோம். அதனை சிலர் எமது பலவீனம் என்று நினைக்கின்றார்கள். ஆத்திரப்படுபவர்கள் அவதிப்படுபவர்கள் அவ்வாறு நினைப்பதில் தவறில்லை. ஆனாலும் நாம் இவ்விடயத்தில் ஒற்றுமையாக இயங்க வேண்டியது அவசியம். ஆனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உள்ளது. அந்த எல்லையையும் கூட நாம் ஒருமித்தே தாண்ட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கேள்வி: தற்போதைய நெருக்கடி நிலையில் மு.கா மௌனம் சாதிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றதே?
பதில்: மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியல்ல. எமது மௌனம் கூட்டு முயற்சிக்கு உதவுவதற்காகவே தொடர்கின்றது. கூட்டு முயற்சி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுவரை பொறுப்போம். அதன் பின்னர் நமது மௌனத்துக்கு விடை கொடுப்போம்.
கேள்வி: இந்த மௌனத்தினால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கிறதாமே?
பதில்: அப்படியொன்றும் இல்லை. ஆனால் எமது கட்சிக் கூட்டங்களில் இன்றைய இனவாத செயல்பாடுகள் அவசரமாக விவாதிக்கப்படுவது உண்மைதான். அதனை கட்சிக்குள் பிளவாக கருதக்கூடாது. ஆரோக்கியமான விவாதங்களாகவே அவை நோக்கப்பட வேண்டும்.
கேள்வி: தற்போதைய விவகாரத்தை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்: இனவாதத்தால் பிளவு பட்ட ஒரு நாட்டில் இவ்வாறான மதவாத நடவடிக்கைகள் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும். மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஒரு இனவாத யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னர் மதவாத உணர்வுகள் புதிதாக விதைக்கப்பட்டிருப்பதும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நாட்லெ சட்டம் ஒழுங்குகள் இருந்தும் கவனிப்பாரற்று கட்டுக்கடங்காமல் வளர விடுவதும் முஸ்லிம்களின் மத்தியில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன.
இந்த சந்தேகம் களையப்படாவிட்டால் இன்னுமொரு சிக்கலான சூழலுக்குள் நாம் தள்ளப்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதது. அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு பல சக்திகள் 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: எவ்வாறான தீர்வு நல்லது?
பதில்: மதவாதத்துக்கான தீர்வு இனவாதத்துக்கான தீர்வு என்று இரண்டு வகையான தீர்வுகள் இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. இரண்டு தீர்வுகளும் உணர்வு ரீதியான உரிமை சார்ந்த விடயங்களே. விட்டுக் கொடுப்புடன் சகவாழ்வு, சமாதானம், மனித உரிமை போன்ற விழுமியங்களின் அர்த்தமுள்ள பெறுமானம்கள் மதிக்கப்படும் போதுதான் நிலையான ஒரு தீர்வைப் பெற முடியும். விடாப்பிடியாக ஒரு அடக்குமுறையான சமாதானம் திணிக்கப்படும்போது எவரும் எதனையும் அனுபவிக்க முடியாது போய்விடும். பல்லின மக்கள் வாழும் எத்தனையோ நாடுகளில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுகளையும் ஆட்சி முறைகளையும் தீர்வாக அமைந்துள்ளன. நிம்மதியான வாழ்வை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவ்வாறான ஆட்சி முறையினை பெருமனது கொண்டு நாமும் அமுல்படுத்துவதே நல்லதேர் தீர்வாகும். இல்லாவிடின் இந்த பூமி ஒரு மயான பூமியாக மாறுவதனை யாரும் தடுக்க முடியாது.
கேள்வி: அமைச்சரவை உப குழுவின் முடியில் திருப்தி காண்பீர்களா?
பதில்: அமைச்சரவை உப குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு பொறிமுறையாகும். அக்குழு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்போகும் தீர்வு “ஹலால்’ சம்பந்தப்பட்ட விவகாரத்துக்கான நீர்வாகத்தான் இருக்கும். ஏற்கனவே பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்குள் அகப்பட்டு கடுமையான விமர்சனங்களுக்குள்ளான இவ்விவகாரம் தற்போது மிகவும் எதிர்பார்ப்புடன் நோக்கப்படுகின்றது. கொள்கையளவில் சகலரும் இதனை ஏற்றுக் கொள்வதாக ஒத்துக் கொண்டுள்ளனர். எனினும் இந்த உப குழுவின் அறிக்கை கையளிக்கப்படும் முன்னர் மீண்டும் ஒருமுறை சபையில் பரிசீலிக்கப்படுவது நல்லது என்று நான் நினைக்கின்றேன்.
கேள்வி: அபாயா, பள்ளிவாசல் தகர்ப்பு இன்னோரன்ன பிரச்சினைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: ஹலால் பிரச்சினை வெளிவந்த போது அதற்கான தீர்வுகளைத் தேடும் ஒரு கூட்டு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் நடந்தேறிய பள்ளிவாசல் தகர்ப்பு பிரச்சினைக்கு இவ்வாறு ஒரு கூட்டு முயற்சி காத்திரமாக எடுக்கப்படவில்லை. ஏனெனில் அது ஒரு சாரரின் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. அரசாங்கமும் அப்படியே கூறிவந்துள்ளது. ஹலால் விடயம் விசனம் அடைந்த போது அதைத் தீர்ப்பதற்காக உயர்மட்ட அரச உதவிகளும் நாடப்பட்டன. அத்துடன் எல்லாப் பிரச்சினைகளும் முடிவடைந்ததாகவே நாம் நினைத்தோம்.
தற்போது அபாயா, ஷரீஆ சட்டம், முஸ்லிம்களின் குடிப்பரம்பல் என பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குறிவைக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்றன்பின் ஒன்றாக முழுக்கிடைப்படவுள்ளன. இவற்றை முறியடிப்பதற்காக நாம் ஆயுதம் ஏந்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு தரப்பினர் எம்மை சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் நாசகார வலைகளில் நாம் மாட்டிக் கொள்வது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நம்மிடம் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக நமது அரசியல் தலைமைகள் ஒருமித்த குரலில் இவ்விடயங்களை உயர் மட்டத்துக்கு எடுத்துக்கூற முடியாத கையாலாகாத நிலையிலேயே உள்ளதாக விளங்குகின்றது. கடந்த வாரம் கிழக்கில் நடத்திய கடையடைப்பு சாத்வீகப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு மட்டுமல்ல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் கூட ஒரு கடினமான செய்தியை முஸ்லிம்கள் சொ ல்லியிருக்கின்றார்கள்.
கேள்வி: தயட்ட கிருள அபிவிருத்தியில் தமிழ் முஸ்லிம் பகுதிகள் புறக்கணிப்பாம்?
பதில்: பரவலாக எல்லாராலும் சொல்லப்படுகின்ற ஒரு குற்றச்சாட்டுத்தான் இது. அம்பாறை மாவட்டம் என்னும் போது அதில் பெரும்பான்மை சமூகம் மட்டும்தான் வாழ்கின்றார்கள். மற்றவர்கள் வெறும் உதிரிகள் என்ற ஓர் எண்ணம் என்றும் அவர்களிடம் உண்டு. இதைத்தான் மறைந்த தலைவர் அஷ்ரப் அடிக்கடி பிரஸ்தாபித்தார். கரையோர மாவட்டம் ஒன்றைப் பொறாதவரை எமக்கு இவ்வாறான புறக்கணிப்புக்கள் தொடர்வதை நாம் தவிர்க்க முடியாது.
அம்பாறை மாவட்டத்திற்கான தலை நகரான அம்பாறை நகரில் பல மில்லியன் செலவிலான அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறும் வேளையில் கரையோர மாவட்டத்தில் அதாவது அஷ்ரபின் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்தில் ஒற்றைப்பட்ட மில்லியனில் பெரும் அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வயிறறெரிச்சலை நாம் மீண்டும் கொட்டிக் கொள்வதால் என்ன கிடைக்கப் போகின்றது?.
கேள்வி: ஹெல உறுமய அரசின் பங்காளிக் கட்சி, முஸ்லிம்களை பகிரங்கமாகவே எதிர்க்கும் இக்கட்சியுடன் அரசில் அங்கம் வகிக்கலாமா?
பதில்: அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் நமக்கு எதிராக அரசுக்குள் இருந்து செயல்படும் சக்திகளை நாம் வலுவிழக்க செய்யலாம் என்ற தத்துவக்கருத்துக்களினால் நாங்கள் அன்று அடிக்கடி மூளைச் சலவை செய்யப்பட்டது உண்மைதான். துரதிஷ்டவசமாக மூளை ஒரு பக்கம் சலவை இன்னொருபக்கமாக நாம் இப்போது இடம்பெயர்ந்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா, சீனா போன்ற சக் திகள் ஒரு பக்கமும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மறு பக்கமாக அஇருப்பதாக நினைத்துக் கொண்டு நாங்கள் ஒன்றாக இருக்கின்றோம். யாருடைய வீட்டோ சக்திகள் மேலோங்கும் என்பதனை நமது மதம் சார்ந்த விடயங்கள் உக்கிரமடையும் போது நாம் பார்க்கத்தான் போகின்றோம் இன்ஷா அல்லாஹ்.
கேள்வி: பொதுபலசேனா மோசமான முறையில் பிரசாரம் புரிகிறதே? என்ன செய்யலாம்?
பதில்: பொதுபலசேனா அட்டசாகம் மேலோங்கச் செல்வதனை யாரும் தடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. முஸ்லிம்களை பச்சை பச்சையாக தோலுரிக்கும் அவர்களது கீழ்த்தரமான பிரச்சாரங்கள் இன்னும் கேள்விக்குட்படுத்தப்படவில்லை.
புனித கஃபாவில் பன்றியின் உருவம் பதித்து நமது உணர்வுகளை சர்வதேச ரீதியாக இணையத்தளங்களினூடாக கப்பலேற்றியது முதல் நமது உயர்ந்த உலமா சபையினரை பயங்கரவாதிகளாகவும் கப்பம் பெறுபவர்களாகவும் கள்வர்களாகவும் சித்தரித்தது வரை அவர்களது பிரச்சாரம் தடையின்றி தொடர்கின்றது. கண்மணி றசூல் (ஸல்) அவர்களின் வாழ்வையும் அவர்கள் இழிவுபடுத்தியுள்ளனர். முற்றும் துறந்த முனிவர்களான அவர்கள் நம் பெண்களின் முக்காடுகளை நீக்குமாறு கட்டளையிடுகின்றனர்.
மொத்தமாகச் சொல்லப்போனால் ஒரு முஸ்லிமும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழக்கூடாது. வாழ்வதானால் அவர்கள் அடிமைகளாக மட்டுமே வாழலாம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தப்பார்க்கின்றனர்.
ஜனநாயக சோசலிசக் குடியரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கான ஒரு அரசியல் சாசனமும் அதன் தலைமையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு ஜனாதிபதி, பாராளுமன்றம், நீதிமன்றங்கள் மூலம் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும் சில சக்திகள் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. தமக்கென ஒரு பொலிஸ் படையையும் அமைத்துக் கொண்டதாக பிரகடனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம் என்று வேறு நீங்கள் கேட்கின்றீர்கள். அர்த்தமுள்ள ஒரு கேள்வி. ஒரு அரசியல் கட்சியின் செயலாளர் என்ற வகையில் உங்கள் கேள்விக்கு கூட்டுப் பொறுப்புடன் பதில் சொல்ல முடியாமல் கூனிக் குறுகிப்போகின்றேன். என்னை மன்னியுங்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒரு பதில் உண்டு. அல்ஹம்து லில்லாஹ்.
கேள்வி: இரண்டு கொள்கலன்களில் அஷ்ரப் ஆயுதம் கொண்டு வந்ததாக பொதுபலசேனா குற்றம் சாட்டுகிறதே…?
பதில்: இதில் எவ்வித உண்மையும் இல்லை. ஆயுதக் கலாசாரத்திலிருந்து முஸ்லிம் இளைஞர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுப்பதற்காகவே முஸ்லிம் காங்கிரஸை அவர் தோற்றுவித்தார். அவ்வாறான ஒரு கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருந்தவரைப் எவ்வாறு கொள்கலன்களில் ஆயுதம் கொண்டு வந்திருக்க முடியும்?
பொதுபலசேனா சொல்வது உண்மையாக இருந்திருந்தால், அஷ்ரப் ஆயுதக் கலாச்சாரத்தில் நாட்டம் கொண்டவராக இருந்திருப்பாரானால் இன்று இந் நாட்டிலிருந்து தமிழ் ஈழம் என்றோ பிரிந்து போயிருக்கும். ஒற்றை நாட்டுக்குள் சகல சமூகங்களும் தத்தமது சுதந்திர அடையாளங்களை நிறுவிக் கொண்டு நிம்மதியாக வாழக் கூடிய ஒரு தீர்வையே அவர் முன்வைத்தார்.
இந்த மண்ணிலிருந்து மறைந்து போன முஸ்லிம் தலைவர்களையும் பொதுபலசேனா விட்டு வைக்காது சீண்டுவதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்நாட்டிலிருந்து முஸ்லிம்களை அடியோடு அழித்து ஒழிப்பதிலிருந்து அவர்கள் ஓயப்போவதில்லை. அதனை மௌனமாகப் பார்த்தக் கொண்டிருப்பவர்கள் இதனைப் புரிந்து கொள்வார்களா? இறைவன் நம்மைக் காப்பாற்றுவானாக!
கேள்வி: அரசுடன் பங்காளிக் கட்சியாக தொடர்ந்து நிலைத்திருப்பீர்களா?
பதில்: கட்சியின் தற்போதைய நிலமை மிகவும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றது. எங்களது வேலைத் திட்டங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பின் தள்ளப்பட்டுள்ளன என்பது உண்மைதான்.
அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நாம் எமது நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. இதற்கு பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் ஒற்றுமையான உறுதிப்பாடு அவசியமாகும். இவ்விடயங்கள் கட்சி மட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்ற அழுத்தம் எம்மீது படிந்துள்ளது. நிறைய விட்டுக் கொடுப்புக்களுடன் முஸ்லிம்களின் நலம் கருதிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் மக்களின் எதிர்ப்பலைகளை சமாளிக்க முடியாது போய்விடும்.
வெகு விரைவில் இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வு வருமா என்று எவ்வளவு காலம்தான் பொறுத்திருப்பது. கடல் வற்றிக் கருவாடு சாப்பிடக் காத்திருக்கும் பூனைகள் குடல் வற்றிச் செத்த கதையாக மாறுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்!
கேள்வி: ஜெனிவா தீர்மானங்கள் பற்றி கட்சியின் நிலைப்பாடு?
பதில்: ஜெனிவா தீர்மானத்திலிருந்து விடுபட வேண்டுமானால் அரசாங்கத்திலுள்ளவர்கள் “கற்றுக்கொண்ட பாடங்கள்’ சபையின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதைத் தவிர வழியே கிடையாது. அமைச்சர் விமல் வீரவங்சவின் உண்ணாவிரத எதிர்ப்பைக் கண்டு ஐ.நா. சபையைக் கலைத்துவிட்டு சர்வதேச சமூகம் ஓடி ஒழிந்துவிடும் என்று தான் நமது நாட்டில் பலர் எண்ணியிருந்தார்கள். கடைசியில் ஒரு கிளாஸ் ஆரஞ்சுப் பழரசத்தடன் அவரது போராட்டம் சுவையாக முடிந்து விட்டது.
சர்வதேச சமூகம் என்பது சாமானியமானதல்ல. அந்த சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என்பதை மறந்து வாழ முடியாது. மடியில் கனமிருந்தால் தான் வழியில் பயப்பட வேண்டும். கனமில்லை என்பதை நிமிர்ந்து நின்று நிரூபிக்கும் தைரியம் வராதவரை நிலமையை சமாளிப்பது கடினம். பல முன்னுதாரணங்களை நாம் கண்டுள்ளோம். இந்நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்று கண்களை மூடிக் கொண்டு தீக்கோழி போல தலையைப் பூமிக்குள் புதைப்பதில் அர்த்தமில்லை.
இந்நாட்டிலுள்ள மூன்று சமூகத்தினரும் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பது ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தெரிந்த விடயமாகும். அவற்றினை அடிப்படையாக வைத்து ஒரு நகல் வரையை அரசாங்கம் முன்வைத்து பேச்சுவார்த்தைகளை இதய சுத்தியுடன் தொடங்க வேண்டும். இந்த அழகான பூமியை ஒரு அமைதிப் பூங்காவாக மாற்ற சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் யுத்தத்தை முன்னெடுத்தவர்களும் அதனோடு சம்பந்தப்பட்டவர்களுமே. அதனை அடிமட்டத்திலுள்ள அப்பாவி இலங்கைப் பிரஜைகள் மத்தியில் அமைதியைக் குழப்புவதற்குப் பாவிப்பது ஆபத்தானது.
கேள்வி: கிழக்கில் உங்களது செல்வாக்கு சரிகிறதா? அடுத்துவரும் தேர்தல்களில் எவ்வாறு செயல்படுவீர்கள்?
பதில்: செல்வாக்கு என்பது செல்வாக்கைப் பொறுத்தது. தேர்தல்களில் வழங்கிய செல்வாக்குகளில் ஏற்பட்ட கீறல்கள் தான் செல்வாக்கு இழப்பதற்கு மூல காரணமாக முடியும். என்னைப் பொறுத்தவரையில் இந்த கேள்விக்குப் பதில் வெளிப்படையாக சொல்லக்கூடிய ஒரு நிலையில் நான் இல்லை. ஏனெனில் இது ஒரு கூட்டுத் தீர்மானமாகத்தான் வெளிப்படவேண்டும். அதற்கான காலம் நெருங்கி வருகின்றது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் மேடைகளில் நாம் சொல்லும் கருத்துக்களைக் கொண்டுதான் வாக்காளர்கள் வழிநடத்தப்படுகின்றார்கள். மீண்டும் அவர்களிடம் செல்லும் ஒரு கட்டம் வரும் போது எம்மைக் கேள்விக்குட்படுத்தும் உரிமை அவர்களுக்குண்டு. இந்த நாட்டிலுள்ள ஜனநாயக பாரம்பரியங்கள் அனைத்தும் அதிகாரத்தை நோக்கி காந்தம்போல் இழுபடும் தன்மைøயாக இருப்பது சிறுபான்மை சமூகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்தப் பொறிமுறையிலிருந்து விடுபடுவதற்கு நிறைய தியாகங்களை செய்யக்கூடிய மனப்பக்குவம் வேண்டும். அந்த பக்குவத்தைப் பெறுவதற்கான பயிற்சிப்சறையை நடாத்துவதற்குரிய எந்தவித காரணியும் இன்றுள்ளவர்களிடம் இல்லாதது பெரும் குறையாகும்.
இந்தக் காரணிகளின் தாற்பரியங்களை சீர்தூக்கிப் பார்த்து நெஞ்சுறுதியுடன் முடிவுகளை எடுக்கும் தைரியம் உள்ளவர்களால் தான் அடுத்த தேர்தலில் தாக்குப்பிடிக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து. அதனால்தான் நான் அடிக்கடி வாக்காளர்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்.

நன்றி நவமணி

0 comments :
Post a Comment