பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்தவேண்டும் என சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக காத்தான்குடி மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய பிரதியமைச்சர்,
பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டிருக்கின்றன. அதற்காக பொதுபல சேனாவிற்கு முஸ்லிம்கள் நன்றி செலுத்தவேண்டும். பல்வேறு விமர்சனங்களுக்கும் சமுகத்தின் மத்தியில் எழும் கேள்விகளுக்கும் மத்தியில் தான் நாங்கள் சமுகத்திற்காக பணிசெய்கின்றோம். அமைச்சுப் பதவிகள் ஒன்றும் எங்களுக்குப் பெரிதல்ல என்றார்.

0 comments :
Post a Comment