இலங்கையில் 74 பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு இயங்குகின்றன.


நாட்டில் ஒரு ஆசிரியரை மாத்திரம் கொண்டு மாணவர்களுக்குக் கற்பிக்கும் அரச பாடசாலைகளாக 74 பாடசாலைகள் இயங்குகின்றன எனக்கல்வி அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

52 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 22 சிங்கள மொழிப்பாடசாலைகளும் என இவ்வாறு இயங்குகின்றன. வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான ஒரு ஆசிரியரை மட்டும் கொண்டதாகச் செயற்படும் பாடசாலைகள் அமைந்துள்ளன. இம்மாகாணத்தில் 44 பாடசாலைகள் இவ்வாறு உள்ளன. இப்பாடசாலைகளில் 43 தமிழ் மொழிப்பாடசாலைகளும் 01 சிங்களப் பாடசாலையும் அடங்கும்.

வவுனியா மாவட்டத்தில்:34 தமிழ் மொழிப் பாடசாலைகளும்,
01 சிங்களப் பாடசாலையும், 
முல்லைத்தீவு மாவட்டத்தில்:
05 தமிழ் மொழிப் பாடசாலைகளும்,
மன்னார் மாவட்டத்தில்:
03 தமிழ் மொழிப்பாடசாலைகளும்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்:
01 தமிழ் மொழிப்பாடசாலையும்.
கண்டி மாவட்டத்தில்.
02 சிங்கள மொழிப் பாடசாலைகளும்.
மாத்தளை மாவட்டத்தில்’
07 சிங்கள மொழிப் பாடசாலைகளும்
நுவரெலியா மாவட்டத்தில்
02 சிங்கள மொழிப் பாடசாலைகளும்
01 தமிழ் மொழிப்பாடசாலையும்.
காலி மாவட்டத்தில்
01 சிங்கள மொழிப்பாடசாலையும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில்.
03 தமிழ் பாடசாலைகளும்.
திருகோணமலை மாவட்டத்தில்.
02 தமிழ்மொழிப் பாடசாலைகளும்.
குருணாகல் மாவட்டத்தில்.
01 சிங்களப் பாடசாலையும்.
அநுராதபுரம் மாவட்டத்தில்.
01 சிங்கள மொழிப் பாடசாலையும்.
பதுளை மாவட்டத்தில்.
02 சிங்கள மொழிப் பாடசாலையும்.
இரத்தினப்புரி மாவட்டத்தில்.
1 சிங்களமொழி பாடசாலையும்,
3 தமிழ் மொழிப் பாடசாலையும்.
கேகாலை மாவட்டத்தில்.
04 சிங்களப் பாடசாலைகளும் செயல்படுவதாக மேலும் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :