பொத்துவில் பிரதேச முஸ்லிம்களை; தமது பாரம்பரிய காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றை ஒரு பாடமாகக்கொண்டு நமது பிரச்சினைகளை தீர்க்க நமது பிரதேச அரசியல் தலைமையை பலப்படுத்த அம்மக்கள் முன் வரவேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
பொத்துவிலை சேர்ந்த புத்திஜீவிகள் சிலர் பொத்துவில் மக்கள் எதிர் நோக்கும் காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக முபாறக் மௌலவியை தொடர்பு கொண்டு விளக்கிய போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் அவர்கள் மத்தியில் மேலும் கூறியதாவது,
காணிகள் விடயத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரம்பரியமாக விட்ட பெருந்தவறுகள் இன்று அவர்களின் முன்பாக பூதாகரமாக உருவெடுத்துள்ளன. முஸ்லிம்களின் காணிகள் ஓரிடத்திலும் வாழ்விடம் இன்னோரிடத்திலும் இருப்பதே இதற்கு பிரதான காரணம் என்பதையும் இவற்றுக்கு என்ன தீர்வு என்பதையும் 2007ம் ஆண்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் நான் மிகத்தெளிவாக பகிரங்கமாக கூறியிருந்தேன்.
அவ்வுரை ஊடகங்களிலும் வந்தது. முஸ்லிம்கள் தமது காணிகள் உள்ள இடங்களில் குறைந்தது பகல் வேளை தொழுகைக்காக சிறிய பள்ளிவாயலைக்கூட கட்டவில்லை. இதன் காரணமாக அதிகாலை வயலுக்கு செல்லும் ஒரு விவசாயி இரவான பின் வீடு திரும்பும் வரை அவன் தொழாத நிலை ஏற்பட்டதும் இத்தகைய சோதனைகளுக்கு காரணமாகும்.
ஆயிரக்கணக்கான ஏக்கர்களை உரிமையாகக்கொண்ட முஸ்லிம்கள் இணைந்து தமது வயல்காணிகளின் நடுவில் சிறிய பள்ளிவாயல்களை அன்று கட்டியிருந்தால் இன்று அதனை சுற்றியுள்ள காணிகள் யாருக்குரியவை என்ற கேள்வியே எழுந்திருக்காது. இந்நிலை பொத்துவிலில் மட்டுமல்ல அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு, திருகோணமலை என தொடர்கிறது.
அதே போல் முஸ்லிம்கள் தமது வயற்காணிகளின் ஓரங்களில் தமது குடியிருப்புக்களை கட்டாமல் தமது காணியிலிருந்து ஐந்து அல்லது பத்து கிலோ மீட்டருக்கப்பாலேயே இவர்களது வீடுகள் இருக்கும். இந்நிலை மாற வேண்டும் என அன்று நான் சொன்னதை மக்கள் கேட்காததன் விளைவு இன்று இனவாதிகளுக்கு சாதகமாக உள்ளது.
இன்று பொத்துவில் மக்கள் எதிர் நோக்கும் காணி பிரச்சினைகளை சொல்வதற்காக அம் மக்கள் வாகனம் பிடித்து தமது தலைவர்களை தேடி கொழும்புக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்ச்pனையை பார்க்க கொழும்பிலிருந்து தமது தலைவர் எப்போது வருவார் என காத்துக்கிடக்கும் கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.
நமக்கான தலைமை என்பது நமக்கு அண்மையில் இருந்திருந்தால் மிக இலகுவாக அவர் மூலம் இப்பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வர முடியும். ஆனால் அம்பாரை மாவட்டத்தில்; அரசியல் அறிவுள்ளவர்கள் இல்லை என்பது போல் கிழக்குக்கு வெளியே உள்ள தலைiமையிடம் சரணடைந்துள்ளதன் விளைவுகளே இவை. நமது பெறுமதிமிக்க வாக்குப்பலத்தை நமது மண்ணுக்கு பலம் சேர்க்க முடியவில்லை.
இவ்வாறு நாம் சொல்வதன் மூலம் பிரதேச வாதத்தை பேசுவதாக அர்த்தப்படாது. நாம் யதார்த்தத்தையே கூறுகிறோம். அடுத்த ஊர் அழகனை விட சொந்த ஊர் முடவன் மேல் என்ற நமது மூதாதையர் மொழி பொய்யாவதில்லை. நாமோ இன்னொரு மாகாணத்தில் நமது தலைமையை வைத்துக்கொண்டிருக்கிறோம்.
இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எப்போது தமது தலைமை கிழக்குக்கு கிடைக்கும் என இலவு காத்த கிளிபோல் உள்ளனர். ஹக்கீம் மரணித்தால் இது நடக்கும் என சிலர் கற்பனை கட்டுகிறார்கள். ஒரு வேளை ஹக்கீம், அலவி மௌலானா போல் 80 வயதையும் தாண்டி வாழ்ந்தால் என்ன செய்வது? இன்றிருக்கும் பலர் மரணித்து விடுவார்கள்.
அதன் பின்னரும் கிழக்குக்கு இத்தலைமை கிடைக்காது. ஏனென்றால் தாருஸ்ஸலாம் கொழும்பில் உள்ளதால் நான்கு சண்டியர்களை அதனை சுற்றிவர நிறுத்தி விட்டு அங்கேயே தலைவரை உருவாக்க இப்போதே பலர் கனவு காண்கின்றனர்.
இத்தகைய நிலையை நீக்கி நமக்கான கட்சி, நமது மண்னின் தலைமை என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் மக்கள் கட்சி தனது சிந்தனையை விதைத்து வருகிறது. இதனால் எமது தலைமையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாம் சொல்லவில்லை.
முஸ்லிம் சமூகத்துக்காக சுயநலமின்றி, இஸ்லாமிய அரசியல் செய்யும் ஏதும் கட்சிகள் நமது பிரதேசத்தில் இருந்தால் அதனை பலப்படுத்துங்கள். அப்படி எதுவும் இல்லை என்றால் எம்மோடு இணைந்து செயற்பட முன்வாருங்கள் என்றுதான் கூறுகிறோம். இந்த உண்மையை பொத்துவில் மக்களும் உணர்வதன் மூலமே எதிர்காலத்தில் நமது வாக்குகள் மூலமான பலத்தை உறுதிப்படுத்தி நமது காணிகளை காப்பாற்ற முடியும்.

0 comments :
Post a Comment