தொழில் சங்கம்' என்ற பெயரில் நாடளவிய ரீதியிலுள்ள திணைக்களங்கள்,

(எம்.பைஷல் இஸ்மாயில்)
தொழில் திணைக்களத்தின் கீழ் 'அணைத்து முகாமைத்து உதவியாளர் தொழில் சங்கம்' என்ற பெயரில் நாடளவிய ரீதியிலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபணங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் என்பன வற்றில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் ஒன்று சேர்ந்து தொழிற் சங்கம் ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

இந்நிகழ்வு நிந்தவூர் - அல் அஸ்ரக் மகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர் ஏ.ஜி.முபாரக் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது பல கலந்துரையாடல் இடம்
பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக குழுவினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட நிருவாக உறுப்பினர்களின் விபரம் வருமாறு,

இதன் தலைவராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஏ.ஜி.முபாறக் என்பவரும், செயலாளராக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஏ.எல்.எம்.இர்ஷாத்தும், பொருளாளராக சாய்ந்தமருது கேட்டக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்  யூ.யல்.எம்.ஜௌபர் ஆகியோர் உட்பட 23 பேரைக் கொண்ட அதி உயர்பீடம் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் தவிசாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலக  நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜூனைத்தீன் என்பவரும் பிரதி தலைவராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கடமையாற்றும் எஸ்.திபாகரனும், பிரதி செயலாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர் திருமதி எஸ்.ரீ.அமினுத்தினும், உதவி செயலாளராக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஏ.சி.எம்.ஹனீஸ் ஆகியோர் குறிப்பிட்ட பதவிகளுக்காக நியமிக்கப்பட்டனர்.  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :