( எஸ்.அஷ்ரப்கான் )
கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்துடன் மாநகர சபை கலை கலாச்சாரக் குழு இணைந்து நடாத்துகின்ற கல்முனை மேயர் கிண்ணம்-2013 சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 01ம் திகதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
இது விடயமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (18) கல்முனை முதல்வர் காரியாலயத்தில் முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் இந்த
சுற்றுப்போட்டி என்றுமில்லாதவாறு மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள்
செய்யப்பட்டுவருவதாகவும், 20 ஓவர்கள் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழாவிற்கு இலங்கையின் பிரசித்திபெற்ற கிரிக்கெட் வீரரான பிரபலம் ஒருவரை கொண்டுவருவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதுபோல் இப்பிரதேசத்தின் முன்னணி கழகங்களான 16 கழகங்கள் இச்சுற்றுப்போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளது.
இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று 1ஆம், 2ஆம் இடங்களைப்பெறும்
அணிகளுக்கு முறையே 1 இலட்சம், 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும்
வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படுவதுடன், இதற்காக பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்பட உள்ளதாகவும், குறிப்பாக மாநகர சபையிலிருந்து எவ்வித பணமும் இதற்காக எடுத்துக்கொள்ளப்படாது.

என்பதையும் உறுதிப்பட தெரிவித்த முதல்வர் கல்முனை பிரதேச விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காகவும், கல்முனை
சந்தாங்கேணி மைதானத்தின் அபிவிருத்திக்காகவும் இடப்படும் முதல்
அடித்தளமாக இந்த சுற்றுப்போட்டி அமைய இருப்பதாகவும் இதற்காக கட்சி
பேதங்களை மறந்து சகல தரப்பினரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்
முதல்வர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடகசியலாளர் மாநாட்டில் பிரதேச ஊடகவியலாளர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். றியாஸ், எம்.ஐ.எம். அமீர், மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை கிரிக்கெட் சம்மேளனத் தலைவர் எம். எம். ஜெஸ்மின், செயலாளர், ஏ.பி.எம். பைசால், உப தலைவர்களான யு.எல்.எம். பஸீர், எஸ்.எல்.எம். லாபீர் ஆகியோருடன் விளையாட்டுக்கழக அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment