அங்கிருந்து வெளியேறுவதற்கான வீசாக்களை வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக தங்கியுள்ள பணியாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் அனுர முத்துமால தெரிவித்துள்ளார்.இதுவரை சுமார் 600 பணிப்பெண்களுக்கு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் நாடு திரும்புவதற்கான தற்காலிக கடவுச் சீட்டுக்களை வழங்கியுள்ளது.
இதற்கமைய, இவர்கள் இன்று முதல் அரேபிய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் நான்காயிரம் இலங்கைப் பணியாளர்களுக்கு இதுவரை தற்காலிக கடவுச் சீட்டுகள் வங்கப்பட்டுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கன்சியுலர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளர் எம்.பி.எம்.சரூக் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவில் தற்போது சுமார் 10 ஆயிரம் இலங்கைப் பணியாளர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகவும் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments :
Post a Comment