ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (18.05.2013)குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய மற்றும் அத்தேர்தல் தொகுதிகளில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதோடு தற்கால அரசியல், நாட்டு நிலைமை என்பன குறித்து உரையாற்றினார்.
அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாரூக், எம்.எஸ். தவ்பீக்,வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, எம்.எம். தஸ்லிம், அம்பாரை மாவட்ட மு.கா. பொருளாளர் மற்றும் தேசிய பணிப்பாளருமான ஏ.சீ. ஏஹியாகான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் ஆகியோர் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும் இந்தச் சந்திப்புகளில் பங்குபற்றினர்.
0 comments :
Post a Comment