மகளின் பேஸ் புக் கணக்கை நீக்கக் கோரி தாய் நீதி மன்றில் புகார்.

மரணித்த தனது மகளின் ஃபேஸ்புக் கணக்கை நீக்குமாறு வலியுறுத்தி தாய், நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரேசிலின் மத்தியப் பகுதியில் உள்ள காம்போ கிராண்டே என்ற இடத்தில் வசித்து வந்த ஜூலியானோ  ரிபைரோ காம்போஸ்(24) என்ற பெண், பத்திரிகையாளராகப் பணி புரிந்து வந்தார். அவர், கடந்த வருடம் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் உயிரிழந்தார். அதற்கு முன்னர் அவர் சமூக இணையதளமான ஃபேஸ் புக்கில் தனக்கென சுயவிபரமிட்ட பக்கத்தைத் தொடங்கிருந்திருக்கிறார்.

இந்த நிலையில் சுய விபரமிட்ட பக்கத்தை தன் மகளின் ஃபேஸ் புக்கிலிருந்து அவளின் விபரங்களை  உடனடியாக நீக்குமாறு தாய் நீதிமன்றத்தில் வலியுறுத்தியதன் அடிப்படையில் பிரேசில் நாட்டு நீதிபதி உடன் அந்த கணக்குகள நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜூலியானாவின் தாய் கூறும்போது, "ஜூலியானாவின் நண்பர்களும், உறவினர்களும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருக்கான பாடல்கள் போன்றவற்றை ஃபேஸ்புக்கில் அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இது தனக்கு மிகவும் துன்பத்தைத் தருவதால் அந்தப் பக்கத்தை நீக்கும் படி முகபுத்தக நிறுவனத்திடம் கூறினேன். அவர்கள் அதை நீக்கவில்லை எனவே நீதிமன்றத்தை வலியுறுத்தினேன்." என்று கூறினார்.

"48 மணி நேரத்திற்குள் அந்தப்பக்கத்தை மூடாவிட்டால், சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்" என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்த பின்னரே ஜூலியானோவின் பக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :